Posts

திருவிளையாடற்புராணம் பற்றிய குறிப்புகள்..!

TNPSC Tamil Notes  Thiruvilayadal Puranam  திருவிளையாடற்புராணம் பற்றிய குறிப்புகள்..! திருவிளையாடற்புரணம் புராணம் – பழைய வரலாறு. ★ மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்ற நூல் திருவிளையாடற் புராணம். ★ மதுரைக் காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருவாலவாய்க் காண்டத்தில் 16 படலங்களும் அமைந்துள்ளன. ★ இந்நூல் 3363 பாடல்களை கொண்டுள்ளது.  ★ பெரிய புராணத்திற்கு அடுத்ததாகப் பெருமை பெற்று விளங்குவது.  ★ இந்நூல் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடற் புராணத்தையும், வடமொழி நூலாகிய “ஆலாசிய மாகாத்துமியம்” என்னும் நூலையும் தழுவி எழுதப்பட்டது. ★ இது. 3 காண்டம், 64 படலம், 3363 பாடல்கள் தொடை நயமும், பக்திச்சுவையும் மிக்க இந்நூலுக்கு ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையெழுதியுள்ளார். மேற்கோள்கள் : “இரவினீர்ங் குழலும் அற்றோ என அஃதும் என்னா வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்” “தன்பால் ஆகிய குற்றம் தேரான்” “ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனை...

தேம்பாவணி பற்றிய குறிப்புகள்

 தேம்பாவணி பற்றிய  குறிப்புகள்  TNPSC Tamil Notes - Thembavani  தேம்பவாணி ★ தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர் ★ தேம்பா + அணி, தேம்பா என்பதற்கு “வாடாத” என்றும் அணி என்பதற்கு “மாலை” என்றும் பொருள். ஆகத் தேம்பாவணி என்பதற்கு “வாடாத மாலை” என்று பொருள். ★ தேன் + பா + அணி, தேன் போன்ற பாக்களால் ஆன மாலை” என்றும் பொருள் கூறுவர். ★ 20ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் சமயச்சார்பானவை. ★  இக்காப்பியமும் கிறித்துவச் சமயத்தைச் சார்ந்த நூல். ★ 3 காண்டங்களையும், 36 படலங்களையும் 3615 பாடல்களையும் கொண்ட நூல். ★ இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைப் பாட்டுடைத் தலைவராக கொண்ட பாடப்பட்ட நூல். ★ சூசையப்பர் வரலாறு, அன்னை இறைமகன் பங்கு, பழைய, புதிய ஏற்பாட்டு வரலாற்று நிகழ்வுகள் இதன் அடிப்படையாகும். ★ காப்பியத்தின் இலக்கணத்தை கூறும் தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல் காப்பியத்தில் அமையும் கிளைக்கதைகள் பற்றி ஏதும் கூறுவில்லை.  ★ இதில் ஏறக்குறைய 40 கிளைக் கதைகள் இடம் பெற்றுள்ளன. ★ இல்லற வாழ்க்கையைவிடத் துறவற வாழ்க்கையை வலியுறுத்துகிறது. ★ காப்ப...

கலித்தொகை பற்றிய குறிப்புகள்...!

கலித்தொகை பற்றிய  குறிப்புகள்..! TNPSC Tamil Notes  Kalithogai  கலித்தொகை நூற்குறிப்பு: ★ ஆசிரியர் எண்ணிக்கை : 5 ★ பாடல் எண்ணிக்கை: 150 ★ எல்லை : 11-80 ★ பொருள் : அகம் ★ தொகுத்தவர் : நல்லந்துவனார் ★ தொகுப்பித்தவர் : தெரியவில்லை ★ கடவுள் வாழ்த்து பாடியவர் நல்லந்துவனார் ★ தெய்வம் : சிவன் ★ பா வகை : கலிப்பா ★ கலிப்பாவால் ஆன 150 பாடல்களைக் கொண்ட தொகை நூல் இது. ★ அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். ★ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்கலியே பரிபாட்டு ஆயிறு பாவினும்  உரிய தாகும் என்மனார் புலவர். ★ இதில் கடவுள் வாழ்த்து உட்பட 150 பாடல்களும் இன்றும் கிடைக்கின்றன. கலி பாடல்கள் ஆசிரியர்கள் :  ★ குறிஞ்சி 29 கபிலர் ★ முல்லை 17 நல்லுருத்திரன் ★ மருதம் 35 மருத இளநாகனார் ★ நெய்தல் 33 நல்லந்துவனார் ★ பாலை 35 பெருங்கடுக்கோ ★ கடவுள்வாழ்த்து 1.நல்லுந்துவனார் முதலிலுள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியிலுள்ள நெய்தற்கலியையும் பாடி இந்நூலை தொகுத்தவர் நல்லந்...

ஐங்குறுநூறு பற்றிய குறிப்புகள்..!

ஐங்குறுநூறு பற்றிய குறிப்புகள்..! Notes on the  Ainkurunuru..! TNPSC Tamil Notes - Ainkurunuru   ஐங்குறுநூறு நூற்குறிப்பு : ★ ஐங்குறுநூறு : ஐந்து + குறுமை + நூறு ★ ஆசிரியர்:  எண்ணிக்கை 5 ★ பாடல் எண்ணிக்கை : 500 ★ எல்லை : 3-6 ★ பொருள் : அகம் ★ தொகுத்தவர் : புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார் ★ தொகுப்பித்தவர் : யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ★ கடவுள் வாழ்த்து பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார் ★ தெய்வம்   : சிவன் ★ மூன்றடிச்சிறுமையும், ஆறடிப் பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற அகப்பொருள் நூலாகும். ★ திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக ஐந்த திணைக்கு ஐந்நூறு பாடல்கள் உள்ளளன. திணைப்பாடல்கள் ஆசிரியர்கள்:  ★ குறிஞ்சி கபிலர் ★ முல்லை பேயனார் ★ மருதம் ஒரம் போகியார் ★ நெய்தல் அம்மூவனார் ★ பாலை ஓதலாந்தையார் இச்செய்தியை “மருதமே ரம்போகி நெய்த லம்மூவன் கருதுங் குறிஞ்சி கபிலன் – கருதிய பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு” என்னும் பாடல் உணர்த்துகின்றது. ★ இந்திர விழா குறித்து இந்நூல் கூறுகிறது. மேற்கொள...

குறுந்தொகை பற்றிய குறிப்புகள்...!

குறுந்தொகை பற்றிய  குறிப்புகள்...! TNPSC Tamil Notes - kurunthogai    குறுந்தொகை நூற்குறிப்பு : ★ குறுந்தொகை : குறுமை + தொகை ★ ஆசிரியர் எண்ணிக்கை 205 ★ பாடல் எண்ணிக்கை 400 + 1 (கடவுள் வாழ்த்து) ★ எல்லை 4-8 ★ பொருள் அகம் ★ தொகுத்தவர்   பூரிக்கோ ★ தொகுப்பித்தவர் தெரியவில்லை ★ கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ★ தெய்வம் முருகன் ★ குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. ★  இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.  ★ இதில் கடவுள் வாழத்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன ★ இந்நூலைத் தொகுத்தவர் . பாரதம் பாடிய பெருந்தேவனார் ★  இந்நூலுக்கு கடவுள் வாழத்துப் பாடியுள்ளார்.  ★ இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை. ★ இந்நூல் வாயிலாகப் பண்டைத் தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு அறவுணர்வு முதலியவற்றை அறியலாம். ★ மேற்கோள்கள் / பாடல்வரிகள்  9ஆம் வகுப்பு நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு ...

நற்றிணை பற்றிய குறிப்புகள்

நற்றிணை பற்றிய  குறிப்புகள்..! TNPSC Tamil Notes - Narchinai   Tamil Literary Encyclopedia, நற்றிணை நூற்குறிப்பு : ◆ ஆசிரியர் எண்ணிக்கை : 275 ◆ பாடல் எண்ணிக்கை : 400 ◆ எல்லை : 9 – 12 ◆ பொருள் ;: அகம் ◆ தொகுத்தவர் : தெரியவில்லை ◆ தொகுப்பித்தவர் பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி ◆ கடவுள் வாழ்த்து பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார் ◆ தெய்வம் : திருமால் ◆ பா – வகை : அகவற்பா ◆ பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சங்கநூல்கள் என போற்றப்படுபவன. ◆ எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்த எண்ணப்படுவதும், நல் என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்படுவதும் நற்றிணையே. ◆ இஃது அகத்திணை நூலாகும். ◆ நற்றிணை பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர் பலரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்புநூல் ஆகும். ◆ ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல் அறவழியல் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பும் நூலிது. ◆ இதில் ஐந்திணைக்குமான பாடல்கள் உள்ளன.  ◆ இதிலுள்ள பாடல்கள், ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரெண்டு அடிப்பேர...

அகநானூறு பற்றிய குறிப்புகள்

அகநானூறு பற்றிய  குறிப்புகள்  TNPSC Tamil Notes - Agananuru  Tamil Literary Encyclopedia, அகநானூறு நூற்குறிப்பு : ◆ அகநானூறு =  அகம் + நான்கு + நூறு ◆ ஆசிரியர் எண்ணிக்கை = 145 ◆ பாடல் எண்ணிக்கை = 400 ◆ எல்லை = 13 – 31 ◆ பொருள் = அகம் ◆ தொகுத்தவர்    = உருத்திர சன்மனார் ◆ தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ◆ கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார் ◆ தெய்வம் = சிவன் ◆ அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருப்பினும் அகம் என்றே பெயர் அமைந்த பழந்தமிழ் இலக்கயி நூல் இது மட்டுமே. ◆ இந்நூலுக்கு நெடுந்தொகை என்னும் பெயரும் உண்டு. ◆ அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது. ◆ முதல் 120 பாட்டுகள் – களிற்றியானை நிறை ◆ அடுத்த 180 பாட்டுகள் – மணிமிடை பவளம் ◆ கடைசி 100 பாட்டுகள் – நித்திலக்கோவை இந்நூலில் ◆ 1, 3 என ஒற்றைப்படை எண்களாகவருவன = பாலைத்திணை – 200 ◆ 8 என வருவன = குறிஞ்சித்திணை – 80 ◆ 14 என வருவன = முல்லைத்திணை – 40 ◆ 6, 16 என வருவன = மருத்திணை – 40 ◆ 20 என வருவன = நெய்தல் – 40 ◆ திணைப்பாடல்களாவும் அமைத்துக் தொகுக்கப்...