ஐங்குறுநூறு பற்றிய குறிப்புகள்..!

ஐங்குறுநூறு பற்றிய குறிப்புகள்..!

Notes on the Ainkurunuru..!

TNPSC Tamil Notes - Ainkurunuru 

 ஐங்குறுநூறு நூற்குறிப்பு :

★ ஐங்குறுநூறு : ஐந்து + குறுமை + நூறு

★ ஆசிரியர்:  எண்ணிக்கை 5

★ பாடல் எண்ணிக்கை : 500

★ எல்லை : 3-6

★ பொருள் : அகம்

★ தொகுத்தவர் : புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்

★ தொகுப்பித்தவர் : யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

★ கடவுள் வாழ்த்து பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்

★ தெய்வம்   : சிவன்

★ மூன்றடிச்சிறுமையும், ஆறடிப் பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற அகப்பொருள் நூலாகும்.


★ திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக ஐந்த திணைக்கு ஐந்நூறு பாடல்கள் உள்ளளன.


திணைப்பாடல்கள் ஆசிரியர்கள்: 

★ குறிஞ்சி கபிலர்

★ முல்லை பேயனார்

★ மருதம் ஒரம் போகியார்

★ நெய்தல் அம்மூவனார்

★ பாலை ஓதலாந்தையார்


இச்செய்தியை

“மருதமே ரம்போகி நெய்த லம்மூவன்

கருதுங் குறிஞ்சி கபிலன் – கருதிய

பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே

நூலையோ தைங்குறு நூறு”


என்னும் பாடல் உணர்த்துகின்றது.


★ இந்திர விழா குறித்து இந்நூல் கூறுகிறது.

மேற்கொள்கள்: 

“நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க”

“பால்பல ஊறுக பகருபல சிறக்க”

“பகைவர்புர் ஆர்க பார்ப்பார் ஒதுக”

“பசியில் லாகுக பிணிசேண் நீங்குக”

“வேந்துபைக தணிக யாண்டுபல நந்துக”

எனப் புலவர் ஓரம்போகியார் “வேட்கைப்பத்து” என்னும் தலைப்பிலுள்ள 


★ பத்துப்பாடல்களில் சிறந்த உலகியல் கருத்துகளை அமைத்துப் பாடியுள்ளார்.


நாணிலை மன்ற பாண நீயே

கோணேர் இலங்குவளை நெகிழ்த்த


கானலந் துறைவற்குச் சொல்லுகுப் போயே


★ இவ்வாற செறிவுமிக்க சிறிய பாடல்களடங்கிய இந்நூலுக்கு ஒளவை ச.துரை சாமிப்பிள்ளை உரையெழுதியுள்ளார்.


“பச்சூன் பெய்த பைந்நிண வல்சி

பொலம்புனை கலந்திற் றகுகுவென் மாதே”  – ஓதலாந்தையார்

Comments

Popular posts from this blog

சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார்..!

தேம்பாவணி பற்றிய குறிப்புகள்

கலித்தொகை பற்றிய குறிப்புகள்...!