நற்றிணை பற்றிய குறிப்புகள்

நற்றிணை பற்றிய  குறிப்புகள்..!

TNPSC Tamil Notes - Narchinai  

Tamil Literary Encyclopedia,

நற்றிணை நூற்குறிப்பு :

◆ ஆசிரியர் எண்ணிக்கை : 275

◆ பாடல் எண்ணிக்கை : 400

◆ எல்லை : 9 – 12

◆ பொருள் ;: அகம்

◆ தொகுத்தவர் : தெரியவில்லை

◆ தொகுப்பித்தவர் பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி

◆ கடவுள் வாழ்த்து பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்

◆ தெய்வம் : திருமால்

◆ பா – வகை : அகவற்பா

◆ பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சங்கநூல்கள் என போற்றப்படுபவன.

◆ எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்த எண்ணப்படுவதும், நல் என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்படுவதும் நற்றிணையே.

◆ இஃது அகத்திணை நூலாகும்.

◆ நற்றிணை பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர் பலரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்புநூல் ஆகும்.

◆ ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல் அறவழியல் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பும் நூலிது.

◆ இதில் ஐந்திணைக்குமான பாடல்கள் உள்ளன. 

◆ இதிலுள்ள பாடல்கள், ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரெண்டு அடிப்பேரெல்லையும் கொண்டவை.

◆ மேற்கோள்கள் / பாடல்வரிகள்

10 ஆம் வகுப்பு

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்

மறுகால் உழுத ஈரச் செறுவின்

வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனொடு பெயரும் யாணர் ஊர

நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும்

செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே.


-மிளைகிழான் நல்வேட்டனார்


◆ அரி – நெற்கதிர்

◆ செறு – வயல்

◆ யாணர் – புது வருவாய்

◆ வட்டி – பனையோலைப் பெட்டி


இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்

சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,

பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,

நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,

விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!

இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க,

செலீஇய சேறிஆயின், இவளே

வருவை ஆகிய சில் நாள்

வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!

நக்கண்ணையார்


◆ திணை – நெய்தல்

◆ துறை – புணர்ந்து நீங்கிய 

◆ தலைவனைத் தோழி வரைவு கடாயது

Comments

Popular posts from this blog

சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார்..!

தேம்பாவணி பற்றிய குறிப்புகள்

கலித்தொகை பற்றிய குறிப்புகள்...!