கலித்தொகை பற்றிய குறிப்புகள்...!
கலித்தொகை பற்றிய குறிப்புகள்..!
TNPSC Tamil Notes Kalithogai
கலித்தொகை நூற்குறிப்பு:
★ ஆசிரியர் எண்ணிக்கை : 5
★ பாடல் எண்ணிக்கை: 150
★ எல்லை : 11-80
★ பொருள் : அகம்
★ தொகுத்தவர் : நல்லந்துவனார்
★ தொகுப்பித்தவர் : தெரியவில்லை
★ கடவுள் வாழ்த்து பாடியவர் நல்லந்துவனார்
★ தெய்வம் : சிவன்
★ பா வகை : கலிப்பா
★ கலிப்பாவால் ஆன 150 பாடல்களைக் கொண்ட தொகை நூல் இது.
★ அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.
★ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்கலியே பரிபாட்டு ஆயிறு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர்.
★ இதில் கடவுள் வாழ்த்து உட்பட 150 பாடல்களும் இன்றும் கிடைக்கின்றன.
கலி பாடல்கள் ஆசிரியர்கள் :
★ குறிஞ்சி 29 கபிலர்
★ முல்லை 17 நல்லுருத்திரன்
★ மருதம் 35 மருத இளநாகனார்
★ நெய்தல் 33 நல்லந்துவனார்
★ பாலை 35 பெருங்கடுக்கோ
★ கடவுள்வாழ்த்து 1.நல்லுந்துவனார்
முதலிலுள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியிலுள்ள நெய்தற்கலியையும் பாடி இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார் என்று நச்சினார்க்கினியர் குறித்துள்ளார்.
★ கலிப்பா : கலித்தளை விரவித் துள்ளலோசை உடையதாய்த் தரவு, தாழிசை, அம்போதரங்கம், அராகம், தனிச்சொல், சுரிதகம் என்னம் உறுப்புகள் அமையச் சுவைபடப்பாடும் வகையாகும்.
★ நல்லுந்தவனார் இயற்றிய மாமலர் முண்டகம் எனத் தொடங்கும் நெயதல் திணைப்பாடல் முதன்மையான ஒன்றாகும்.
“ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப்படுவது படறிந்தொழுகுதல்;
அன்பெனப் பவடுவத தன்கிளை செறாஅமை
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்”
★ கலித்தொகைப் பாடல்கள் உணர்ச்சி கொந்தளிப்பன உள்ளத்தைத் தொடுவன எனலாம்.
நல்லந்துவனார் வரலாறு:
★ இவரது இயற்பெயர் அந்துவனார் என்பதாம். இப்பெயரின் முன் “ந” என்னும் சிறப்புடைச் சொல் சேர்த்து வழங்கப்படுதலால் இவர் சிறப்பை உணரலாம்.
Comments
Post a Comment