திருவிளையாடற்புராணம் பற்றிய குறிப்புகள்..!

TNPSC Tamil Notes 

Thiruvilayadal Puranam 

திருவிளையாடற்புராணம் பற்றிய குறிப்புகள்..!



திருவிளையாடற்புரணம்

புராணம் – பழைய வரலாறு.

★ மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்ற நூல் திருவிளையாடற் புராணம்.

★ மதுரைக் காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருவாலவாய்க் காண்டத்தில் 16 படலங்களும் அமைந்துள்ளன.

★ இந்நூல் 3363 பாடல்களை கொண்டுள்ளது. 

★ பெரிய புராணத்திற்கு அடுத்ததாகப் பெருமை பெற்று விளங்குவது. 

★ இந்நூல் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடற் புராணத்தையும், வடமொழி நூலாகிய “ஆலாசிய மாகாத்துமியம்” என்னும் நூலையும் தழுவி எழுதப்பட்டது.

★ இது. 3 காண்டம், 64 படலம், 3363 பாடல்கள் தொடை நயமும், பக்திச்சுவையும் மிக்க இந்நூலுக்கு ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையெழுதியுள்ளார்.


மேற்கோள்கள் :

“இரவினீர்ங் குழலும் அற்றோ என அஃதும் என்னா

வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்”


“தன்பால் ஆகிய குற்றம் தேரான்”

“ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனைக் காய்ந்த

நாவலன் இம்மெனத் திரவுருக் கரந்தான்.


Comments

Popular posts from this blog

சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார்..!

தேம்பாவணி பற்றிய குறிப்புகள்

கலித்தொகை பற்றிய குறிப்புகள்...!