எட்டுத்தொகை நூல்கள் எது?

எட்டுத்தொகை நூல்கள் எது?

Tamil Literary Encyclopedia,


எட்டுத்தொகை நூல்கள்:

★ எட்டுத்தொகை (Eight Anthologies) என்பது எட்டு நூல்களின் தொகுப்பு.

★  இது சங்க இலக்கியத்தில் ஒன்று. 

★ இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல கால கட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக் கப்பட்டது.

★  இவற்றில், பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. 

★ அகத்தையும் புறத்தையும் பற்றிய பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப் பட்டமையால், தொகை எனப் பெயர் பெற்றது. 

★ இத்தொகையுள், ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற் புலவர்களும் உண்டு. 

★ ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.

★ எட்டுத்தொகை நூல்களுள், பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து, மற்றவை ஆசிரியப் பாவால் அமைந்து,

★ சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. 

★ இந்நூல்கள், கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். 

★ இது தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.

எட்டுத்தொகை நூல்கள் :

★ நற்றிணை

★ குறுந்தொகை

★ ஐங்குறுநூறு

★ பதிற்றுப்பத்து

★ பரிபாடல்

★ கலித்தொகை

★ அகநானூறு

★ புறநானூறு


எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை"


இவற்றுள்,

★ அகப்பொருள் பற்றியவை: 

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு. 

புறப்பொருள் பற்றியவை : 

★ புறநானூறு, பதிற்றுப்பத்து.

அகமும் புறமும் கலந்து வருவது: 

★ பரிபாடல்.

★ அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. 

★ புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடவேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன.


Comments

Popular posts from this blog

சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார்..!

தேம்பாவணி பற்றிய குறிப்புகள்

கலித்தொகை பற்றிய குறிப்புகள்...!