சங்க இலக்கியம் என்பது என்ன?
சங்க இலக்கியம் என்பது என்ன?
Tamil Literary Encyclopedia,
சங்க இலக்கியம் :
(Sangam literature)
★ சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கி.மு. 500-இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.
★ சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.
★ இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு.
★ சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன.
★ பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் அறியத்தருகின்றன.
★ 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரின் முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன.
★ சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள் பதினெண் மேற்க்கணக்கு நூல்கள் எனவும்; சங்கமருவிய நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment