சங்க கால புலவர்கள் பாடிய எட்டுத் தொகை நூல்கள்:

சங்க கால புலவர்கள் பாடிய எட்டுத் தொகை நூல்கள்..!

Tamil Literary Encyclopedia,

சங்க கால புலவர்கள் பாடிய எட்டுத் தொகை நூல்கள்..!

1. சங்க காலமும், சங்ககால நூலும் .

2. எட்டுத் தொகை நூல்கள் யாது ?

3. எட்டுத்தொகை நூல்களைப் பாடிய புலவர்கள் .


1. சங்க காலமும், சங்ககால நூலும் :

★ கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள்.

★ இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும். இப் பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர்.

★ எட்டுத்தொகை நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

" நற்றிணை நல்ல குறுந்தொகை ஐந்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை"


★ இவ்வெட்டுத் தொகை நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1.அகப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

1.நற்றிணை (Narrinai)

2.குறுந்தொகை (Kurunthokai)

3.ஐங்குறுநூறு (Ainkurunooru)

4.கலித்தொகை (Kalithokai)

5.அகநானூறு (Agananooru)

ஆகிய ஐந்து நூல்களும்,


2.புறப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

1.பதிற்றுப்பத்து (Pathirruppattu)

2.புறநானூறு (Purananooru)

ஆகிய இரண்டும்,


3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

1.பரிபாடல் (Paripadal)

ஆகிய ஒன்றும் அடங்கும். 


2. எட்டுத் தொகை நூல்கள் யாது ?

அகப்பொருள் பற்றிய நூல்கள் : 5

புறப்பொருள் பற்றிய நூல்கள் : 2

அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்: 1

5 + 2 + 1 = 8 எனஎட்டு நூல்கள் எட்டுத்தொகை நூல்களாகும்,


3. எட்டுத்தொகை நூல்களைப் பாடிய புலவர்கள் :

★ எட்டுத்தொகை நூல்களைப் பாடிய புலவர்கள் ஏறத்தாழ ஐந்நூற்றுவர்.

★  இதில் பெண்பாற் புலவர்களும் அடக்கம், 

★ இவர்கள் பல ஊர்களில் வாழ்ந்தவர்கள். 

★ பல்வேறு காலத்தவர்கள். பல்வேறு பிரிவினர்கள். 

★ இவர்களுடைய பாடல்களில் பெருநில வேந்தர்களின் வெற்றிச் சிறப்புகளையும், போர்த்திறமையையும் விவரித்துக் கூறும் .

★ பாக்கள் பல; போரைத் தடுத்து அறிவு புகட்டுவன சில;

★  வள்ளல் தன்மையை பாராட்டுவன பல; 

★ வருமையின் கொடுமையினை வருணிப்பன சில; 

★ மாண்பதை வாழ வழிகாட்டுவன பல; 

★ ஆணும் பெண்ணும் மனம் இணைந்து ஒழுகும் அன்பொழுக்கங்களை எடுத்துரைப்பன சில;

★  வரலாற்றுக் குறிப்பினையும் புராண இதிகாச செய்திகளை குறிப்பிடுவன சில, 

★ பொதுவாக பழந்தமிழ் நாட்டின் வரலாற்றினை இதன் மூலமாக அறிகின்றோம் ,


Comments

Popular posts from this blog

சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார்..!

தேம்பாவணி பற்றிய குறிப்புகள்

கலித்தொகை பற்றிய குறிப்புகள்...!