கொங்குநாடு பற்றிய குறிப்புகள்..!
References about Kongunadu ..! கொங்குநாடு பற்றிய குறிப்புகள்..! By. Tamil Literary Encyclopedia, கொங்குநாடு: ★ கொங்குநாடு பற்றிய குறிப்புகள் சுமார் 2000 ஆண்டு கட்கு முன்பிருந்தே நமக்குக் கிடைத்துள்ளன. ★ சங்க இலக்கியத் தில் கொங்குநாடு என்ற பெயர் கூறப்படவில்லையானாலும் கொங்கர் பற்றிய குறிப்பு நிறைய வருகின்றன. ★ கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் கொங்கு நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. ★ கொங்குநாட்டு எல்லைப்புறங்கள் முழுவதும் மலைகள் சூழ்ந்து தனித்தன்மை பெற்று விளங்கின. ★ கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் கொங்கு நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்குநாடு பெயர்க்காரணம் : ★ கொங்குநாட்டிற்கு இப்பெயர் வந்தது பற்றிப் பல கருத்துகள் நிலவி வருகின்றன. ★ பூக்களின் 'தேன்' தான் 'கொங்கு' என்ற பெயருக்குக் காரணம் என்பர். இது பெரும்பாலோருடைய கருத்து. குணக்கு நாடுதான் திரிந்து கொங்குநாடு ஆயிற்று என்பர் டாக்டர் கி. நாச்சிமுத்து அவர்கள். இதற்கு ஆதாரமாகத் துளு மொழியில் கிழக்குத் திசையைக் குறிக்கும் சொல் ‘கொன் என்பதனை அவர் எடுத்த...